கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான அனீஸ், சாஜி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜிதின் ராய் உறவினர் ஷாஜியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது. உதகை பழைய மாவட்ட எஸ்பிஐ அலுவலகத்தில் தனிப்படை காவல்துறையினர் விசாரணையை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 38-வது அரசுத்தரப்பு சாட்சியாக இருக்கும் அனிஷிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஏற்கனவே சாஜியிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அனிஷிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான அனீஸ், சாஜி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…