கோடநாடு – கேரளாவில் உள்ள 8 பேரை விசாரிக்க போலீசார் திட்டம்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவில் உள்ள 8 பேரை வரவழைத்து விசாரிக்க காவல்துறை திட்டம்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமீனில் உள்ள சந்தோஷ், தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ், பிஜின் குட்டி ஆகியோரிடம் விசாரிக்க நீலகிரி போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று கோடநாடு வழக்கு தொடர்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உறவினர்களிடம் கோவையில் டிஜிபி அலுவலகத்தில் காவல் ஆய்வாளர் வேல்முருகன் தமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பித்தக்கது.