கோடநாடு கொலை வழக்கு – சசிகலாவிடம் இன்று விசாரணை!

Default Image

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.அப்போது,கோடநாடு எஸ்டேட்டின் காவலாளியான ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

அடுத்தடுத்து மரணம்:

Kodanad

மேலும்,இந்த கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபரான கனகராஜ் என்பவரும் சேலம் அருகே நடந்த சாலை விபத்தில் இறந்ததார்.இதனைத் தொடர்ந்து,மற்றொரு குற்றவாளியான சயானும் தனது குடும்பத்தினருடன் கேரளா செல்கையில் சாலை விபத்தை எதிர்கொண்ட நிலையில்,மனைவியும் குழந்தையும் பறிகொடுத்தார்.ஆனால்,அவர் காயங்களுடன் தப்பித்தார்.

202 பேரிடம் விசாரணை:

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது.அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். அதே சமயம்,கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் உள்பட 202 பேரிடம் விசாரணை என்பது தொடர்ந்து நடைபெற்றிருக்கிறது.

சசிகலாவிடம் விசாரணை:

இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக விகே சசிகலாவிடம் நீலகிரி தனிப்படை காவல்துறையினர் இன்று காலை விசாரணை நடத்தப்படவுள்ளனர்.

இளவரசியின் மகள் செல்போனில்:

அதன்படி,கோடநாட்டில் இருந்த சொத்துக்கள்,காணாமல் போன பொருட்கள் தொடர்பாக சசிகலாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,கோடநாடு எஸ்டேட்டில் காணமல் போன நிலப்பத்திரங்கள் சென்னையில் ஒரு ஹோட்டலில் இருந்தது சர்ச்சையை எழுப்பிய நிலையில்,அந்த நிலப்பத்திரங்கள் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்தது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் விசாரணை நடத்தப்பட்டது.அதைப்போல, அதிமுக நிர்வாகி ஆறுக்குட்டி,அவரது குடும்ப உறவினர் மற்றும் உதவியாளர்களிடம் விசாரணை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்