#Breaking:கோடநாடு கொலை வழக்கு – சசிகலாவிடம் கேட்கப்பட்ட முக்கிய கேள்விகள்!

Published by
Edison

கோடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கோடநாடு பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் சசிகலா என்பதன் அடிப்படையிலும்,பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும் அவரிடம் நீலகிரி எஸ்பி ஆஷிஷ் ராவத்,ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி மற்றும் பெண் போலீசார் உள்ளிட்டோர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற நிலையில்,கடந்த இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரரணை நீடித்து வருகிறது.

அதன்படி,100 க்கும் மேற்பட்ட கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி,

  • கோடநாடு பங்களாவுக்கு எப்போது நீங்கள் சென்றீர்கள்?,அங்கு எவ்வளவு பணம்,நகைகள் என்னென்ன ஆவணங்கள் இருந்தன?,
  • கோடநாடு பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன?
  • கோடநாடு பங்களாவில் பணி அமர்த்தப்பட்ட ஊழியர்கள் எத்தனை பேர்? அவர்கள் யார் மூலம் வெளியாட்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்?
  • கோடநாடு பங்களா கொள்ளை,கொலை சம்பவம் எப்போது யார் மூலம் உங்களுக்கு தெரிய வந்தது?
  • இது தொடர்பாக யார் மீது உங்களுக்கு சந்தேகம் உள்ளது? ,
  • சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ்,கோடநாடு எஸ்டேட் அலுவலகத்தில் 6 ஆண்டுகளாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக பணி புரிந்து வந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

மேலும்,கோடநாடு எஸ்டேட்டில் காணமல் போன நிலப்பத்திரங்கள் சென்னையில் ஒரு ஹோட்டலில் இருந்தது குறித்தும்,குறிப்பாக அந்த நிலப்பத்திரங்களின் விவரங்கள், புகைப்படங்கள் ஆகியவை இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் செல்போனில் இருந்தது குறித்தும் சசிகலாவிடம் விசாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும்,பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…

14 minutes ago

‘பகலில் ஒரு இரவு’ புகழ் நடிகர் ரவிக்குமார் காலமானார்.!

சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…

21 minutes ago

பார்க்கிங் விவகாரம் : பிக் பாஸ் தர்ஷன் அதிரடி கைது!

சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…

43 minutes ago

“அதிக சம்பளம் வாங்கினால் அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென அர்த்தமல்ல” – விமர்சனங்களுக்கு வெங்கடேஷ் ஐயர் பதிலடி.!

கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…

53 minutes ago

எப்படிப்பா ஆடுற? ஒன்னும் புரியல! அபிஷேக் சர்மாவை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா!

கொல்கத்தா :  அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…

2 hours ago

எலோன் மஸ்க் DOGE-யிலிருந்து வெளியேறுவாரா? டொனால்ட் டிரம்ப் விருப்பம் இது தான்.!

அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…

2 hours ago