கோடநாடு கொலை வழக்கு.., விவேக் ஜெயராமனிடம் 3 மணி நேரம் விசாரணை..!
தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து விவேக் ஜெயராமன் வெளியேறினார்.
ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் கோடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கொடநாடு கொலை வழக்கில் பெரிதாக முன்னேற்றம் இல்லாமல் இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 13-ஆம் தேதி தமிழக அரசு தரப்பில் கொடநாடு வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும் என தொடரப்பட்ட மனுவுக்கு உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதனையடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், கோவையில் வைத்து சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் கோநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் முறையாக விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடைபெற்றது. கோடநாடு பங்களா மேலாளரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் சசிகலா அண்ணன் மகன் விவேக்கிடம் தனிப்படை 3 மணி நேரம் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை முடிந்து விவேக் ஜெயராமன் வெளியேறினார்.