கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரில் நிபந்தனை ஜாமீனில் உள்ள சயான் மற்றும் சிறையில் உள்ள வாளையாறு மனோஜ் உதகை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற 8 பேரும் கொரோனா பரவல் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராதில்லை. விசாரணையை முழுவதுமாக முடிக்க மேலும் ஒரு மாதம் கால அவகாசம் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும், கோடநாடு கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ் தற்கொலை குறித்தும் தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வரும் விசாரணை பற்றிய அறிக்கையை தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தனிப்படை ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், விசாரணை அதிகாரி வேல்முருகன் ஆகியோர் நீதிமன்றம் வந்துள்ளனர். இதுபோன்று அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர்கள் ஷாஜஹான், கனகராஜ் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…