கோடநாடு சம்பவம்;உண்மை குற்றவாளி – ஓபிஎஸ் மகன் பரபரப்பு ட்வீட்!

Default Image

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக,முக்கிய குற்றவாளி கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில்,கேரளாவைச் சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்து இருந்தனர்.இவர்கள் தற்போது ஜாமீனில் உள்ளனர்.அதே சமயம்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கோடநாடு வழக்கு தொடர்பாக கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் தனிப்படை போலீசார் நடத்தி வரும் மேல் விசாரணை தீவிரமடைந்தது.

இந்த வழக்கில் விசாரணை நடத்தக் கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படைகள் அமைக்கப்பட்டு,கோடநாடு வழக்கு தொடர்பாக 220 பேரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில்,அறிக்கை தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டாவது மகன் ஜெயப்பிரதீப் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியதாவது:”நீதி வேண்டும்.எங்களின் குடும்ப தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த இல்லமான கொடநாடு பங்களாவில் மர்மமான முறையில் அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு தமிழக அரசை அஇஅதிமுக இயக்கத்தின் உண்மை தொண்டர்களின் சார்பாக தாழ்மையுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் ஓபிஎஸ்,ஈபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஒற்றைத் தலைமை விவகாரம் நிலவி வரும் இந்த சூழலில்,ஓபிஎஸ் மகனான ஜெயப்பிரதீப் இவ்வாறு கூறியிருப்பது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India
Smriti Mandhana
TN Minister Anbil Mahesh
Sunny Leone shony sins scam
GOLD PRICE