கோடநாடு வழக்கு : 90 சதவீதம் விசாரணை முடிந்த பிறகு சிபிசிஐடி வசம் ஏன் செல்கிறது.? இபிஎஸ் கேள்வி.!
இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை, காவேரி நதிநீர் பங்கீடு விவகாரம் குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசினார் .
அவர் கூறுகையில், கோடநாடு சம்பவத்தை வழக்குப்பதிவு செய்து அதன் குற்றவாளிகளை கண்டறிந்தது அதிமுக ஆட்சியில் தான். அவர்களுக்குள் ஆதரவாக இருந்து வாதாடியது திமுகவினர். அந்த குற்றவாளிகளுக்கு ஜாமீன்தரர்களாக இருந்தது திமுகவினர். ஜமீன்தரர்களுக்கும் குற்றவாளிகளும் என்ன சம்பந்தம்.? அந்த குற்றவாளிகள் எல்லாம் கேரளாவை சேர்ந்தவர்கள். கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற கொடும் குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அதன் மீதான வழக்குகள் கேரள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
தமிழக காவல்துறை விசாரணை மேற்கொண்டு, 90 சதவீத விசாரணை முடிந்துவிட்டது. 790 பக்க விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென அந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது ஏன்.? வேண்டுமென்றால் சிபிஐ வசம் கோடநாடு வழக்கை ஒப்படையுங்கள். என இபிஎஸ் கூறினார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே அவ்வபோது கோடநாடு வழக்கு பற்றி மீண்டும் மீண்டும் கிளப்புகிறார்கள். நாட்டில் எத்தனையோ சம்பவங்கள் இருந்தும் கோடநாடு சமபவம் பற்றி மட்டும் பேசுகின்றனர். கோடநாடு விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நான் கேள்வியெழுப்பிய போது கூட பதில் கூறாமல் இறந்துவிட்டனர் தனது கருத்தை முன்வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி.
அடுத்து காவேரி விவகாரம் பற்றி கூறுகையில் , காவேரி விவகாரத்தில் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி நாடாளுமன்றத்தை அதிமுக முடக்கியது. தமிழத்தின் பிரச்னையை எப்போதும் மத்திய அரசுக்கு அதிமுக எடுத்துரைக்கும் என குறிப்பிட்டார்.
பாஜக கூட்டணி பற்றி இபிஎஸ் பேசுகையில், பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா.? திமுகவும் தான் ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தனர் என குறிப்பிட்டு பேசினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.