கோடநாடு வழக்கு – சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை!

கோடநாடு வழக்கில், அதிமுக பிரமுகர் சஜீவனின் சகோதரர் சிபியிடம் தனிப்படை போலீசார் விசாரணை.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக சஜீவனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று அவரின் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொள்ளையர்களை கூடலூர் சோதனை சாவடியில் இருந்து விடுவித்ததாக கூறப்படும் தகவலின் அடிப்படையில் சிபியிடம் விசாரணை நடைபெறுகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் தொடர்ந்து மேல் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக யார், யாரிடம் விசாரிக்கப்படாமல் இருந்தார்களோ, அவர்களை தற்போது தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக சசிகலா, விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், தற்போது சஜீவன் சகோதரர் சிபியிடம் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு அரங்கேறியது. கொள்ளையர்கள் 24ம் தேதி அதிகாலை கூடலூர் வழியாக கேரளாவுக்கு தப்ப முயன்றபோது காவல்துறை அவர்களை பிடித்தது. அப்போது, சஜீவன் சகோதரர் சிபி ஆலோசனை பேரில் காவல் நிலையத்தில் நேரடியாக அவர் கையொப்பம் இட்டு, ஜாமீன் கொடுத்த அடிப்படையில் கொள்ளையர்கள் விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025