கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை.
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில், இன்று 3வது நாளாக தனிப்படையினர் விசாரிக்கின்றனர். கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப். 24-ம் தேதி கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதுதொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டன.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது. இதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன்படி சமீபத்தில், சசிகலா, கோவை அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி, அவரது மகன் அசோக், சகோதரர் மகன் பாலாஜி, உதவியாளர் நாராயணன், சஜீவன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்டோரிடம் கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்திய நிலையில்,, தற்போது பூங்குன்றனிடம் 3வது நாளாக தனிப்படை போலீசார் இன்று விசாரணையில் ஈடுபட்டுள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…