கோடநாடு வழக்கு – 5 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணை நிறைவு!
கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் நடந்த விசாரணை நிறைவு.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன் விசாரணை நடத்திய நிலையில், இன்று மீண்டும் சாரணை மேற்கொள்ளப்பட்டது. காவலர் பயிற்சி மையத்துக்கு வரவழைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கோடநாடு கொள்ளை கொலை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் கடந்த 5 மணி நேரத்திற்கும் மேலாகதனிப்படை போலீசார் நடத்திய விசாரணை நிறைவு பெற்றுள்ளது.