கொடநாடு வழக்கு- எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக உத்தரவு..!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில்  தன்னை சம்பந்தப்படுத்தி டெல்லியை சார்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் என்பவர் தொடர்ந்து பேசு வருகிறார். இந்த வழக்கில் இருந்து தன்னை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்டுள்ள சையான் மற்றும் மனோஜ்  ஆகியோருக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2019 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் வழக்கில் சாட்சிய பதிவிற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆஜராக வேண்டிய நிலையில் இருந்தது. அப்போது,  நீதிமன்றத்தில் தன் ஆஜராக பட்சத்தில் வழக்கறிஞர்களுக்கும், உயர்நீதிமன்றத்தில் உள்ள பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும் என்பதால் தனது வீட்டில் சாட்சியை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் என மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவை  விசாரித்த நீதிபதி வழக்கறிஞர் கார்த்திகேயன் பாலன் என்பவரை வழக்கறிஞர் ஆணையராக நியமித்து சாட்சி பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், சாட்சியங்களை பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் போலீசார் 10 பேரை கைது செய்யப்பட்டு தற்போது அனைவரும் ஜாமீனில் உள்ளனர். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு, உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்