கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் வாக்குவாதம்.
மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து உதகை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் விசாரணைக்கு தடைகோரி மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், வழக்கு மீதான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இதனிடையே, கோடநாடு விவகாரத்தை திமுக அரசு கையில் எடுத்துள்ளதை கடந்த சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்லபடுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டினார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது. அதாவது, கோடநாடு இல்லத்தில் கொலை, கொள்ளை நடந்தபோது, ஏன் சிசிடிவி கேமராக்கள் செய்லபடவில்லை என முதல்வர் கேள்வி எழுப்பினார்.
அதேபோல் 4 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்த போது கோடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தனியாரிடம் சென்ற கோடநாடு சொத்துக்கு எப்படி பாதுகாப்பு தர முடியும் என முதல்வருக்கு, எடப்பாடி பழனிசாமி பதில் தெரிவித்துள்ளார்.
கோடநாடு என்பது சாதாரண விஷயம் அல்ல, முதல்வர் வாழ்ந்த இடம், அப்போது முதல்வராக இருந்த நீங்கள் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள். புலன் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை விசாரணைக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றத்துக்கு சென்றது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
அதுமட்டுமில்லாமல், குட்கா விவகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, முன்னாள் அமைச்சரின் பெயர் இந்த விவகாரத்தில் இருப்பதாகவும் முதல்வர் தெரிவித்ததை தொடர்ந்து இருவருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தி பல்வேறு விவாதங்களை முன்வைத்து பேசி வந்த எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் கொலை, கொள்ளை இல்ல என்று தெரிவித்துள்ளார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் கோடநாடு சம்பவம் குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பித்தக்கது.
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…