#Breaking:கோடநாடு விவகாரம்….கனகராஜின் உறவினரை 5 நாட்கள் விசாரிக்க அனுமதி ..!

கோடநாடு விவகாரம் தொடர்பாக கனகராஜின் உறவினரை 5 நாட்கள் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி.
கோடநாடு கொலை,கொள்ளை தொடர்பான வழக்கு இன்று உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.இதில்,முதன்மை குற்றவாளியான சயான்,வாளையாறு மனோஜ் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.இந்த வழக்கு விசாரணையின்போது,காவல்துறையினர் கூடுதல் விசாரணைக்கு காலஅவகாசம் கேட்டனர். இதனையடுத்து,வழக்கு அடுத்த மாதம் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உயிரிழந்த கார் ஓட்டுனர் கனகராஜின் உறவினர் ரமேஷ் என்பவரை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கோடநாடு சம்பவம் தொடர்பாக கனகராஜ் சகோதரர் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில்,ரமேஷ் என்பவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் 10 நாட்கள் காலஅவகாசம் கேட்ட நிலையில்,5 நாட்கள் மட்டும் விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024