கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் – அண்ணாமலை

Default Image

கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பாஜக சார்பில், முல்லை பெரியாறு அணை விவகாரத்தில், தமிழக அரசை கண்டித்து தேனி ஆட்சியர் அலுவகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், கேரள அரசிடம் மண்டியிட்டு, நமது மாநில முதல்வர் சரணடைந்து விட்டார் என்று தான் என்று சொல்ல தான் வேண்டும். முல்லைப்பெரியாறு அணை முற்றிலுமாக தமிழக மக்களுக்கு சொந்தமானது. தமிழகத்தின் உரிமையை கேரளாவுக்கு முதல்வர் விட்டுக்கொடுத்துவிட்டார். முதல்வரின் தனிப்பட்ட சொத்து தமிழகம் கிடையாது.

முல்லை பெரியாறு அணை முற்றிலுமாக தமிழக விவசாயிகளுக்கு சொந்தமானது. எனவே திராவிட முன்னேற்ற கழக அரசு தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். முல்லை பெரியாறு அணையை 142 அடி உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்