திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
அண்மையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுகவின் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம்.பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் ,கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன் ,மேலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.
இதனிடையே திமுக நோட்டீஸ்க்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பதில் அளித்தார்.அவரது பதில் கடிதத்தில், கட்சி மாண்பை மீறவில்லை .மற்ற கட்சி தலைவர்களை சந்திக்கக் கூடாது என திமுக விதிகளில் இல்லை .கருணாநிதியை பாஜகவை சேர்ந்த மோடி நேரில் வந்து பார்த்தது அனைவருக்கு தெரியும். ஆகவே கட்சியின் மாண்பை நான் மீறியதாக கூறுவது சரியல்ல. இயற்கை நீதிக்கு விரோதமானது. ஆகவே என் மீதான குற்றச்சாட்டு நோட்டீஸை திரும்ப பெற வேண்டும். சட்டப்படி விசாரணை வைத்து நான் அறிக்கையில் கேட்ட விவரங்களை அளித்தால் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என்று தெரிவித்தார். பின்னர் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
எனவே திமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்து கு.க.செல்வம் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் , கட்சி விதிப்படி, உறுப்பினரை நீக்க பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் என்றும் திமுக தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கு.க.செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இறுதியாக திமுக தலைவர், பொதுச்செயலாளர் செப்டம்பர் 18- ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…