ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி…BMW கார்களை பரிசாக வழங்கிய கிஸ்ஃப்ளோ நிறுவனம்!
சென்னை:ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளார்.
10-வது ஆண்டு கொண்டாட்டம்:
மென்பொருள் சேவை நிறுவனம் தனது முதன்மையான ‘நோ-கோட்'( No-code work management) பணி மேலாண்மை தயாரிப்பை அறிமுகப்படுத்திய 10-வது ஆண்டை கடந்த வெள்ளிக்கிழமை கொண்டாடியது.அப்போது நிறுவனத்தின் ஆரம்ப காலத்திலிருந்து பணியாற்றி வரும் தலைமைப் பொறுப்பிலுள்ள ஐந்து நிர்வாகிகளான:தினேஷ் வரதராஜன்-தலைமை தயாரிப்பு அதிகாரி;கௌசிக்ராம் கிருஷ்ணசாயி-தயாரிப்பு மேலாண்மை இயக்குனர்;இன்ஜினியரிங் இயக்குனர் விவேக்,பொறியியல் துறை இயக்குநர் ஆதி ராமநாதன் மற்றும் துணைத் தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் 5 புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளது.
மிகச் சிறிய பாராட்டுதான்:
இது தொடர்பாக,அந்நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ் கூறுகையில்:
“சொகுசு காரை விட சிறந்த பரிசை நான் நினைக்க முடியவில்லை. என்னுடன் ஆரம்ப காலத்தில் இருந்து தங்கியவர்கள்,அவர்கள் இல்லாமல் கிஸ்ஃப்ளோ இன்று இருந்திருக்காது.இது மிகச் சிறிய பாராட்டுதான்” என்றார்.
160 நாடுகளில் வாடிக்கையாளர்கள்:
மேலும்,வெளிநாடுகளில் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் துபாயில் அலுவலகங்களை அமைப்பதற்கும் நிறுவனம் கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர்கள் செலவழிக்க திட்டமிட்டுள்ளதாகவும்,நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 160 நாடுகளில் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் சுரேஷ் கூறினார்.ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது.
SaaS firm @kissflow gifts #BMW cars to five special employees who have been part of the company’s journey since the start.. company has also completed 10 years of taking its product to the US market @TOIBusiness pic.twitter.com/sZDhPelmfB
— Sindhu Hariharan (@sindhuhTOI) April 8, 2022