கிசான் திட்ட முறைகேடு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது.!

Default Image

பிரதமர் மோடியின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் முறைகேடு அதிக அளவில் நடைபெற்று இருப்பதால் தற்காலிகமாக இந்த திட்டத்தை நிறுத்தி வைப்பதாக அந்தந்த மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்திருந்தார். இதனால் பல மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டடு, விசாரணை நடைபெற்றது. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருந்தார்.

பின்னர் முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் அமுதா, ராஜசேகரன், விழுப்புரம் மாவட்டம் வல்லம் வேளாண்துறை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்கள் என மொத்தம் 19 பேர் பணி நீக்கம் செய்து மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் விவசாய நிதி உதவி திட்ட முறைகேடு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வேளாண் இணை இயக்குநர் வேலாயுதம் அளித்த புகாரின் பேரில் 4 ஒப்பந்த ஊழியர்களை கைது செய்தது சிபிசிஐடி.

மேலும், ஒப்பந்த ஊழியர்களான கண்ணப்பன், ஏழுமலை, வீரன் மணிமேகலையை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக விவசாயிகள் அல்லாத 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர்,திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்