கிசான் திட்ட முறைகேடு: யாரும் தப்ப முடியாது – ககன்தீப் சிங் பேடி விளக்கம்.!

Published by
பாலா கலியமூர்த்தி

கிசான் திட்ட முறைகேட்டில் தொடர்புடைய 80 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் பிரதமர் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். பின்னர் இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கிசான் திட்டத்தில் மூன்று பருவமாக பயணாளிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இந்தியாவில் அனைத்து விவசாய குடும்பங்களுக்கும் ரூ.6000 கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வேளாண் துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தபோது, கிசான் திட்டத்தில் சுமார் ரூ.110 கோடி மோசடி நடைபெற்று உள்ளது. முதலமைச்சர் உத்தரவின் பேரில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.  இதுவரை ரூ.32 கோடி பணம் திரும்பப் பெறப்பட்டு உள்ளது. கொரோனா நிதி தருவதாக கூறி ஆதார் எண்ணை பெற்று அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி மோசடி நடந்துள்ளது. முறைகேடு தொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு, 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை என்றும் கூறியுள்ளார். கணினி மையங்கள், இடைத்தரகர்கள் கூட்டாக செயல்பட்டு மோசடியில் ஈடுப்பட்டது தெரிய வந்துள்ளது. கிசான் திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட யாராக இருந்தாலும் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் ககன்தீப் சிங் பேடி குறிப்பிட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் முழு பணமும் திரும்ப பெறப்படும். உண்மையான விவசாயிகள் ஒருவர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு! 

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

6 minutes ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

42 minutes ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

1 hour ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

2 hours ago

இரண்டாம் முறையாக கர்ப்பமான சிம்பு பட நடிகை.! சனா கானுக்கு குவியும் வாழ்த்துக்கள்…

சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…

2 hours ago