கிசான் திட்டத்தில் தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், வேலூர் போன்ற மாவட்டங்களில் கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள புதிய திட்டபணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழக்தின் கிசான் திட்டத்தின் முறைகேடு குறித்து கூறியுள்ளார். அதாவது, கிசான் திட்டத்தில் தவறு நடந்த இடங்களில் குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
கோவை : எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணாநகர், லட்சுமி நகர், சூலக்கல்,…
சென்னை : சென்னைக்கு மிகக் குளிர்ச்சியான இரவை கொடுப்பதற்காக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வந்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்…
திருச்சி : மாவட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர்…
சென்னை : கேரளாவின் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே நடுக்கல்லுார்,…
சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது…
சென்னை : இன்று (18-12-2024) வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…