புதுவையில் சுகாதார பணிகளை மேற்கொள்ள கிரண்பேடி தடையாக இருப்பதாக புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் காட்டம்.
புதுச்சேரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாகவும் அங்குள்ள கொரோனா அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் அடிக்கடி எழுந்து வரக்கூடிய புகார் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சருக்கு வந்த நெருக்கடியின் பெயரில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அப்பொழுது அங்கு உள்ள கழிவறைகள் சுத்தமாக இருக்கிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படக் கூடிய உணவு தரமானதாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து அவர் நிச்சயம் இன்னும் தரமான உணவுகளை வழங்க அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.
மேலும் இன்னும் அதிக சுகாதாரமாக மருத்துவமனையை வைத்திருக்க பணியாளர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இதன் பின்பு வீடியோ பதிவில் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு அமல் படுத்த அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறேன். மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை ஆசிரியர்கள் வழங்க வேண்டும் எனவும், ரேஷன் கடை மூலம் விநியோகிக்க கூடாது எனவும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் தடை செய்கிறார். அரிசி வழங்குவது ஆசிரியர்கள் வேலை இல்லை ரேஷன் கடை மூலம் இலவச அரிசி வழங்கினால் 5 நாட்களில் மக்களுக்கு வழங்கி விடலாம்.
மேலும் கிரண் பேடி தன்னை ஒரு மருத்துவர் போல நினைத்துக் கொண்டு தவறான முடிவு எடுத்து வருகிறார். கொரோனா மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக கூடுதல் சுகாதார பணியாளர்கள் நியமிப்பதற்கு தடையாக இவர் இருக்கிறார் என்று கூறிய அமைச்சர், கிரண்பேடி ரியல் ஹீரோ அல்ல, முடிந்தால் கொரானா மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்து அங்குள்ள வசதிகளை மேம்படுத்துங்கள். இல்லை என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பு தூங்கியது போலக் தூங்கிக் கொண்டே இருங்கள் என ஆவேசத்துடன் கூறியுள்ளார் புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்.
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…
அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி நாளை (பிப்ரவரி 12 ஆம் தேதி)…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
அமெரிக்கா : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான பிரச்சனை நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின்போது பல ஆயிரம்…