"மலைகளை விழுங்கி ஏப்பம் விட்ட கிரணைட் கொள்ளை" 7 பேருக்கு பிடியாணை…!!

Default Image

கிரானைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
Image result for கிரணைட்
கிரானைட் வழக்கில் கிரணைட் அதிபர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு மேலூர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.கிரணைட் கொள்ளையானது கீழவளவு, கீழையூர், இடையப்பட்டி, திருவாதவூர் உள்ளிட்ட இடங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், கண்மாய்களில் அனுமதி இல்லாமல் கிரானைட் கற்கள் வெட்டியெடுக்கப்பட்டதாகவும், வெடிவைத்து சேதப்படுத்தப்பட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
Related image
இந்நிலையில் காவல் நிலையங்களில் உள்ள வழக்குகள் மேலும் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் தொடர்ந்த வழக்குகள் உட்பட 43 வழக்குகள் இன்று மேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
Image result for கிரணைட் சகாயம்
அப்போது விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத பி.கே.எஸ். கிரானைட் அதிபர் செல்வராஜ், தீபா இன்பக்ஸ் இந்தியா கிரானைட் நிறுவன உரிமையாளர் சந்திரன் மற்றும் அவரது மனைவி சந்திரா, வெடிமருந்து வினியோகம் செய்த சேலத்தை சேர்ந்த மோகன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து ஆஜர்படுத்த உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்திவைத்தார்.
மேலும் இந்த கிரணைட் முறைகேடு நடந்துள்ளதை வெளிவுலகிற்கு அம்பலபடுத்தி,தீவிரமடைய செய்தவர் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியராக பணிபுரிந்த கசகாயம் ஐஏஸ் ஆவார்.இந்த வழக்கில் சாட்சியங்களை அழித்து விடுவார்கள் என்று நடு இரவில் சுடுகாட்டில் தங்கி தடயங்களை பாதுகாத்த நேர்மையான அதிகாரி சகாயம் என்பது குறிப்பிடத்தக்க்து.
DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்