தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளை : ஒப்பந்தம் ஒப்பம் ஆனது..!

தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளை துவங்குவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கையெழுத்தாகி உள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார்.அதன் படி லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் துவங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதோடு தமிழகத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் டெங்கு மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும்,அதனை கையாளும் முறை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.