மோசடி மன்னன்.! உஷார் மக்களே ராணுவ அதிகாரி எனக் கூறி ‘OLX-ல்’ அரங்கேற்றிய திருட்டு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • இணைய தளமான OLX ல் பிரமிள் குமார் என்பவர் ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகக்  கூறி போலி அடையாளத்தை காட்டி ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் அந்த விளம்பரத்தில் கூறியுள்ளார்.
  • இதை நம்பி பாலமுருகன் என்பவர் பைக்கை வாங்குவதற்கு முயன்று கூகுள் பே மூலம் ரூ.1 லட்சம் பணம் எடுத்தாக மோசடி செய்த போலி ராணுவ வீரர் மீது புகார் அளித்துள்ளார். இதை அவர் உட்பட 8 பேரை ஏமாத்தியுள்ளார் என தெரிய வந்தது.

ஆன்லைன் விற்பனை தளமான OLX-ல் பிரமிள் குமார் என்பவர் விளம்பரம் ஒன்றில் நான் சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவப் பிரிவில் வேலை பார்ப்பதாகவும், பணியிட மாற்றம் காரணமாக வேறு மாநிலத்திற்கு செல்ல இருப்பதால் நான் பயன்படுத்திய ராணுவ பைக் விற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். பின்னர் அந்த விளம்பரத்தை பார்த்த சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் ஒருவர், ராணுவ பைக் என்பதால் அதன் தரம் நன்றாக இருக்கும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அவரை தொடர்பு கொண்டு மேலும் விவரங்களைக் கேட்டுள்ளார்.

அப்போது ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என்பதை உறுதி செய்யும் வகையில் ராணுவ அதிகாரிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும் ஐடி கார்டுகள், மற்றும் ராணுவ சீருடையுடன் கையில் ஏ.கே. 47 துப்பாக்கி ஏந்தி நிற்பது போன்ற பல புகைப்படங்கள் ஆகியவற்றை வாட்ஸ் ஆப் மூலம் பாலமுருகனுக்கு அனுப்பிய அவர், நான் ராணுவத்தில் தான் வேலை பார்க்கிறேன் என உறுதியாகக் கூறியுள்ளார்.

இதனை நம்பிய பாலமுருகன், ராணுவ இரு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு முதல் தவணை தொகையாக ரூ.5000 பிரமிள் குமாரின் கூகுள் பே கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னர் அந்த பணத்துக்கு ராணுவ முத்திரையுடன் கூடிய ரசீதை பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார். இதன் பின்னர் மறுநாள் காலையில் எழுந்து தன்னுடைய செல்போனை பார்த்த பாலமுருகன் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் அவரது கூகுள் பே மூலம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து பாலமுருகன் தன்னுடைய பணம் யாருடைய வங்கிக் கணக்கிற்கு சென்றது என்பதை நண்பர் ஒருவரின் செல்போன் மூலம் கண்டுபிடிக்க முயன்றுள்ளார். அப்போது நண்பரின் செல்போனிலிருந்து பிரமிள்குமாரை OLX மூலம் தொடர்பு கொண்ட போது, தனக்கு அனுப்பிய ஐடி கார்டுகளை நண்பரின் செல்போன் எண்களுக்கும் அனுப்பியிருந்ததைப் பார்த்து மேலும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தன்னைப் போலவே 8க்கும்  மேற்பட்டோரை ஏமாற்றிய அதிர்ச்சித் தகவலும் பாலமுருகனுக்கு தெரிந்தது. இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் அளித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

5 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

5 hours ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

6 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

6 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

7 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

7 hours ago