சரக்கு பாட்டிலை ஒழித்து வைத்ததற்கு கொலையா..?
- சரக்கு பாட்டிலை ஒழித்து வைத்ததற்கு அக்காவையே தம்பி குத்தி கொலை செய்த சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
- தகவலறிந்து வந்த காவல்துறையினர் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் இலங்கையை சேர்ந்த பெண்ணான தாரகேஸ்வரி என்பவர் தனது பேரனுடன் வசித்து வந்துள்ளார்.இவரது தம்பி குகதாசன் ஆவார்.இவர் மாலை அணிந்து சபரி மலைக்கு சென்று வந்ததால் சென்னையில் உள்ள தனது சகோதரி தாரகேஸ்வரி வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் குகதாசன் தினமும் குடிப்பதை வழக்கமாக கொண்தால் தீவிர மது பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.இதனால் குடிப்பதற்கு வீட்டிலே இரண்டு மது பாட்டில்களை வாங்கி வைத்துள்ளார்.
பின்னர் ஒரு பாட்டிலை குடித்து முடித்த அவர் மற்றொரு பாட்டிலை தேடிய போது அதை அக்கா தாரகேஸ்வரி மறைத்து வைத்தது தெரியவந்துள்ளது.அதை எடுத்து தருமாறு குகதாசன் தாரகேஸ்வரியிடம் கேட்டுள்ளார்.
அதற்கு தாரகேஸ்வரி எடுத்து தர மறுத்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த குகதாசன் தனது அக்கா என்று கூட பாராமல் அங்கு இருந்த கத்தியை எடுத்து தாருமாறாக குத்தியுள்ளார்.இதில் தாரகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர் தாரகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.அங்கு பிணமாக கிடந்த தாரகேஸ்வரியை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பின்னர் தப்பிக்க முயன்ற குகதாசனை வளைத்து பிடித்துள்ளனர்.
பின்னர் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் குகதாசனை கொலை வழக்கில் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.