17 பேரை கொன்ற மீதமுள்ள சுற்றுச்சுவர் இன்று இடிக்கப்படும் – மாவட்ட ஆட்சியர்..!

Default Image

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் ஆதிதிராவிட காலனியில் சுப்பிரமணியம் என்பவர் வீட்டை சுற்றி  இருந்த 20 அடி உயரமுள்ள சுற்றுச்சுவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் இடிந்து அருகில் இருந்த நான்கு வீடுகளில் விழுந்து உள்ளது. கனமழை பெய்து கொண்டு இருந்ததால் அருகில் இருந்தவர்களுக்கு எந்தவித சத்தமும் கேட்கவில்லை.

இதை தொடர்ந்து அக்கபக்கத்தினருக்கு காலை 5 மணி அளவில் தான் விபத்து நடந்தது தெரியவர பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.இந்த விபத்தில் சம்பவ இடத்திலே 17 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மீதமுள்ள சுற்று சுவர்களை இன்று இடிக்கப்படும் என ஆட்சியர் ராசாமணி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில் ,அந்த சுற்று சுவரை சுற்றி குடியிருப்புகள் இருப்பதால் மீதமுள்ள சுற்று சுவற்றை இடிக்க உள்ளோம்.

மேலும் அந்த சுற்று சுவர் வீட்டின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை கைது செய்யும் நடவடிக்கையை  போலீசார்  தீவிரப் படுத்தி வருவதாகவும் , அவரிடம் விசாரணை நடத்தபட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்