பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யுனிஸ், இவர் கறிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அவருடைய மனைவி திவ்யா பாரதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் 29-ஆம் தேதி அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திவ்யபாரதி உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்றுள்ளனர். தூக்கத்தில் எழுந்து பார்த்த அவர் குழந்தையை காணாமல் பதறிப் போனார். மேலும் குழந்தை காணாமல் போனது குறித்து உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து, உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கோவை மாவட்ட போலீஸ் அதிகாரி நாராயணன் அரசு மருத்துவமனைக்கு வந்து குழந்தை கடத்தப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டர். இதனைத் தொடர்ந்து ஆறு தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
இதனையடுத்து பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு மேற்கொண்டார். இதனை வைத்து கட்டைப்பையில் குழந்தையை வைத்து இரண்டு பெண்கள் குழந்தையை கடத்தி சென்றதை காவல் துறையினர் கண்டறிந்தனர். அதன்படி, போலீசார் ஆய்வு மேற்கொண்ட நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று கடத்தப்பட்ட குழந்தை கேரளா மாநிலம் பாலக்காட்டில் மீட்கப்பட்டுள்ளது.
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்று வரும் பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்ட 30 நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை: த.வெ.க தலைவர் விஜய் பரந்தூர் செல்வதற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், வரும் 20-ம்தேதி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம்…
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி…
இஸ்ரேல்: ஹமாஸ் உடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.…