1000 ரூபாய் பிச்சை சர்ச்சையும்… குஷ்பூ கொடுத்த அதிரடி விளக்கமும்…
Khushbu : நேற்று சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் குஷ்பு பேசியபோது ஒரு சர்ச்சை கருத்தை குறிப்பிட்டார்.
Read More – அமலுக்கு வந்த குடியுரிமை சட்டம்.! முதல்வர் ஸ்டாலின் முதல் தவெக தலைவர் விஜய் வரை கடும் எதிர்ப்பு.!
அதாவது, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் திமுகவின் ஆள் தானே.? அதற்கு திமுக முதல்வர் என்ன பதில் சொல்லப் போகிறார்.? போதை பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தமிழ்நாட்டு தாய்மார்களின் பிரச்சனையை அவர்கள் தீர்த்து வைக்கவில்லை என்று குஷ்பூ பேசினார்.
இதில், தமிழக அரசு மாதந்தோறும் தகுதி வாய்ந்த குடும்பதலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததற்கு சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
Read More – குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) என்றால் என்ன? இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்? விரிவான தகவல்
இந்த கண்டன பேச்சுகள் குறித்து தற்போது தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள குஷ்பு அதில், 1982ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் செயல்படுத்திய இலவச உணவு திட்டத்தை பிச்சை என முரசொலி மாறன் விமர்சித்து இருந்தார். பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்வதை முன்னாள் அமைச்சர் பொன்முடி ஓசி என விமர்சித்தார். அப்போதெல்லாம் நீங்கள் எதுவும் சொல்லவில்லையே என கூறினார்.
Read More – நாடு முழுவதும் CAA குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு
மேலும், தமிழகத்தில் பலர் குடிகாரர்களாக மாறியதால் தாய்மார்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உங்கள் ஆயிரம் ரூபாய் தேவை இல்லை. இந்த பிரச்சனையை சரி செய்தாலே போதும். அடுத்த தலைமுறையை பாதுகாக்க முதலில் டாஸ்மாக்கை நிறுத்துங்கள். அடுத்த 14 தலைமுறை எதிர்காலத்தை பாதுகாக்க திமுகவுக்கு பணம் தேவை. எனவே உங்கள் பொய் பிரச்சாரத்தை தொடருங்கள் என தனது தரப்பு விளக்கத்தையும், கண்டனத்தையும் குஷ்பூ கூறியுள்ளார்.