குஷ்பூவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்…! ட்விட்டர் கணக்கை யாரும் தவறாக பயன்படுத்தி விடக்கூடாது – குஷ்பூ

எனது ட்வீட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர். யாரும் தவறாக பயன்படுத்திவிடக்கூடாது என்று பயமாக இருக்கிறது என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகையும், பாஜக உறுப்பினருமான குஷ்பூவின் ட்விட்டர் பக்கத்தை மர்ம நபர் ஒருவர் முடக்கியுள்ளார். ட்விட்டர் பக்கத்தை முடக்கியது மட்டுமல்லாமல், அதில் உள்ள பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2020-ம் ஆண்டு ஏப்ரலிலும் இவரது ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை குஷ்பூ இதுகுறித்து கூறுகையில், ட்விட்டர் கணக்கு முடக்கியது தொடர்பாக டிஜிபி மற்றும் சைபர் கிரைமில் புகாரளித்துள்ளேன். எனது ட்வீட்டர் கணக்கில் அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளது. எனது ட்வீட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர். அதனால், யாரும் தவறாக பயன்படுத்திவிடக்கூடாது என்று பயமாக இருக்கிறது. மேலும் எனது பாஸ்வேர்டு மாற்றப்பட்டுள்ளதாக ட்வீட்டர் மூலமாக தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியின் போது, ராகுல் காந்தியின் போன் உளவு பார்க்கப்பட்டது தொடர்பாக கூறிய அவர், ராகுல் காந்தியின் போனை உளவு பார்ப்பது மூலம் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025