கணவரின் பணத்தை காப்பாற்ற பாஜகவில் இணைந்தீர்கள்..! டிவிட்டர்வாசி விமர்சனத்துக்கு குஷ்பூ காட்டமான பதில்.!

khushboo sundar

 கணவரின் பணத்தை பாதுகாக்க பாஜகவில் இணைந்ததாக குறிப்பிட்ட நபரை குஷ்பூ டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். 

பாஜக பிரமுகரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ சமீபத்தில் தனது கணவர் பற்றி டிவிட்டரில் கருத்து கூறியவருக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்து உள்ளார்.

குஷ்பூ தனது கணவரும், திரைப்பட இயக்குனருமான சுந்தர்.சி, புகைப்படத்தை பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு ஒரு இணையவாசி,  நீங்கள் உங்கள் கணவரின் பணத்தை பாதுகாப்பதற்காகவே, பாஜகவில் இணைந்துள்ளீர்கள் என விமர்சித்து இருந்தார். இதனை குறிப்பிட்டு உங்களது தொழிலை காப்பாற்றுவதற்காக உங்கள் வீட்டு பெண்களை பயன்படுத்துதவராக நீங்கள் இருக்கலாம். இது வெட்கமற்ற மனிதர்கள். என்றும் ‘அடி செருப்பால’ என்று கடுமையாக அந்த இணையவாசிக்கு பதில் அளித்து உள்ளார் குஷ்பூ.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்