தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு பொறுப்பேற்றார்!

Default Image

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார்.

குஷ்பூவின் அரசியல் பயணம்:

CONGRESSDMKKUSHBOO

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கொடிகட்டி பரந்த நடிகை குஷ்பூ, கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம், அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதுவே இவர், அரசியலில் பயணம் செய்ய முதல்படியாக அமைந்தது. இதன்பிறகு, 2014ம் ஆண்டு ஜூன் மாதம் திமுகவில் இருந்து விலகிய குஷ்பூ, அதே ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தன்னை இணைத்துக்கொண்டார்.

பாஜகவில் இணைந்த குஷ்பூ:

KUSHBOOBJP28

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்ட குஷ்பூ, பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார். திடீர் திருப்பமாக 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்த அவர், அதே நாளில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது பேசும் பொருளாக மாறியது. 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவை பாஜக நிறுத்தியது. அவர் தேர்தலில் திமுக வேட்பாளர் எழிலனிடம் 32,200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

புதிய பொறுப்பு:

NCWDELHI

இதையடுத்து, பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் குஷ்பூ. இந்த சமயத்தில், பாஜக பிரமுகரான குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக குஷ்பு தெரிவித்திருந்த நிலையில், இந்த நியமனத்தை அடுத்து பாஜக பிரமுகர்கள் உட்பட பலரும் குஷ்பூவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

உறுப்பினராக பொறுப்பேற்றார்:

KUSHBOODELHI28

இந்த நிலையில், டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ பொறுப்பேற்றுக்கொண்டார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ 3 ஆண்டுகள் வரை பொறுப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்