தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக பாஜக பிரமுகர் குஷ்பூ நியமனம்.!
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பூ நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் இருப்பவர் நடிகை குஷ்பூ. இவர் பாஜகவில் இணைவதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து இருந்தார்.
பாஜக பிரமுகரான குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை அடுத்து பாஜக பிரமுகர்கள் உட்பட பலரும் குஷ்பூவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.