கடந்த சில நாட்களாக மத்திய அரசை,அரசியல் தலைவர்கள் பலரும் ஒன்றிய அரசு என குறிப்பிட்டு வருகின்றனர்.இதனால்,மத்திய அரசுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும்,தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்,’மக்கள் எப்போதும் அழைப்பது போல் ‘மத்திய அரசு’ என்றே அழைக்கலாம் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில்,மத்திய அரசை “பாரத பேரரசு” என அழைப்போம்,என்று பாஜகவைச் சேர்ந்தவரும் நடிகையுமான குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
இதுகுறித்து குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பல ஆண்டுகளாக எதிர்ப்பில் இருந்தபோதிலும்,மத்திய அரசு என்று அழைப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.எங்கள் தமிழக மாநிலத்தில்,தரம் தாழ்ந்த அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. எனவே,தமிழகத்தில் மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என அழைத்தால்,நாங்கள் ‘பாரத பேரரசு’ என்று அழைப்போம்.இது, அவர்களுக்கு மேலும் புரிந்துகொள்ள உதவும் என்று நான் நம்புகிறேன்.
மேலும்,மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறவர்கள் அனைவரும்,மத்திய அரசின் அதிகபட்ச நலன்களை அனுபவித்து வருபவர்கள்தான்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…