கேலோ இந்தியா – தமிழ்நாட்டிற்கு முதல் தங்கம்..!
இந்தியாவில் மாநில அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் கேலோ இந்தியா என்ற பெயரை நடைபெற்று வருகிறது. கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6-வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த ஆண்டு கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டியை பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் முதல் தங்கத்தை தமிழ்நாடு அணியும் வென்றது. ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற யோகா போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான சர்வேஷ் மற்றும் தேவேஷ் வெற்றி பெற்றனர்.
தமிழ்நாடு அணி 127.89 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் மேற்குவங்க அணி 127.57 புள்ளிகளையும், மகாராஷ்டிரா அணி 127.20 புள்ளிகளும் பெற்றன.