கேலோ இந்தியா: கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிலும் தமிழ்நாடு அணி தங்கம்!
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் இன்று கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில், பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணி எதிராக விளையாடி தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை வென்றது. தமிழ்நாடு அணி 70 பாயிண்ட் எடுத்து வெற்றி பெற்றது. இதுபோன்று, கோவையில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டில் கூடைப்பந்து ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி தங்கம் வென்று அசத்தியது.
தங்கப் பதக்கங்களை வேட்டையாடும் தமிழக வீரர்கள்…பதக்க பட்டியலில் எந்த இடம்?
கூடைப்பந்து இறுதி போட்டியில் ராஜஸ்தான அணியை 86 – 85 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி. எனவே, கூடைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. நேற்று வரை தமிழ்நாடு 17 தங்கம், 8 வெள்ளி, 23 வெண்கலத்துடன் மொத்தம் 48 பதக்கம் பெற்று, 3வது இடத்தில் இருந்தது. இன்றும் அதுபோல் தமிழக அணி பதக்கங்களை குவித்து வருகிறது. இதுதொடர்பான விவரங்கள் விரைவில் வெளியாகும்.