கேலோ இந்தியா விளையாட்டு… இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன் உதயநிதி ஆலோசனை.!
இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன், சென்னையில் இன்று அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.
கேலோ இந்தியா விளையாட்டுகளை முதன்முறையாக தமிழ்நாட்டில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதை அடுத்து, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகளுடன் இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இளம் இந்திய விளையாட்டு வீரர்களுக்கான திறமையை அடையாளம் காணும் தளமாக இருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க திட்டமிடப்பட்டதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இந்த விளையாட்டுப்போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது குறித்து அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தியுள்ளார். முன்னதாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் முதன்முறையாக சென்னையில் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Had a constructive discussion with Sports Authority of India officials today. We exchanged valuable ideas on the conduct of the Khelo India Games 2023 in Tamil Nadu. We drew SAI’s attention to various other requirements which were flagged earlier by TN for elevating the state’s… pic.twitter.com/dBA3kpW79Q
— Udhay (@Udhaystalin) June 8, 2023