கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…

Khelo India 2024

இந்தியாவில் மாநில அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த முறை கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இன்று (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் துவங்குகிறது.

கேலோ இந்தியா போட்டி! பதிவு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு!

பிரதமர் மோடி வருகை :

இன்று மாலை துவங்கும் கேலோ இந்தியா 2024 விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். கேலோ இந்தியா விளையாட்டு விழா தொடக்கம் மற்றும் ராமேஸ்வர பயணம் உள்ளிட்ட அரசுமுறை பயணமாக 3 நாட்கள் தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார்.

4 மாவட்டங்கள் :

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட  4 இடஙக்ளில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து,  5,630 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

இந்த ஆண்டு 27 விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. ஸ்குவாஷ் இந்த முறை அறிமுக விளையாட்டாக இடம் பெறுகிறது. இதில். தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் டெமோ விளையாட்டாக (Demo Sports) இடம்பெற உள்ளது. இப்போட்டிகளை விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நேரில் பார்வையிட வசதியாக அனுமதி சீட்டுகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று (ஜனவரி 19) தொடங்கும் விளையாட்டு போட்டிகள் 13 நாட்கள் நடைபெற்று ஜனவரி 31ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த போட்டியில் மாநிலம் சார்பில் பங்கேற்கும் வீரர்கள் மாநிலங்களுக்காக எத்தனை பதக்கங்களை வென்றுள்ளனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அந்த மாநிலத்திற்கு கேலோ இந்தியா 2024 சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

சாம்பியன்ஸ் : 

2018 – ஹரியானா 

2019  மகாராஷ்டிரா

2020 – மகாராஷ்டிரா

2022 – ஹரியானா

2023 – மகாராஷ்டிரா 

போட்டிகள் நடைபெறும் நாள் – இடம் :

கபடி – ஜனவரி 18 முதல் 22 வரையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

ஸ்குவாஷ் – ஜனவரி 20 முதல் 24 வரையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

பாக்சிங் – ஜனவரி 20 முதல் 24 வரையில் சென்னையில் நடைபெறுகிறது.

யோகா – ஜனவரி 20 முதல் 23 வரையில் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

ஹாக்கி – ஜனவரி 21 முதல் 27 வரையில் சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெறுகிறது.

கூடைப்பந்து – ஜனவரி 21 முதல் 25 வரையில் கோவை பிஎஸ்ஜி மருத்துவ கல்லூரியில் நடைபெறுகிறது.

கால்பந்து – ஜனவரி 22 முதல் 31 வரையில் மதுரை பல்கலைக்கழக மைதானம் மற்றும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கு ஆகியவற்றில் நடைபெறுகிறது.

தடகள போட்டிகள் – ஜனவரி 23 முதல் 25 வரையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

லைவ் ஒளிபரப்பு :

கேலோ இந்தியா 2024-ஐ யூ-டியூப் சேனல் வழியாக  Prasar Bharati Sports எனும் சேனலில் நேரடி ஒளிபரப்பாக பார்க்கலாம். அதே போல டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் மூலமும் கேலோ இந்தியா 2024 விளையாட்டு போட்டிகளை தொலைக்காட்சி வாயிலாக காணலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்