கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நிறைவு! 2வது இடத்தில் தமிழ்நாடு!

Khelo India

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு பெற்றது. 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இருப்பினும், பெரும்பான்மை போட்டிகள் சென்னையிலேயே நடைபெற்றது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சுமார் 6000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகளும், 1600-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்றனர்.

ஒற்றுமை யாத்திரையில் பதற்றம்.? ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல்.!

இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள்  நடைபெற்றன. இதில், ஸ்குவாஷ் அறிமுக விளையாட்டாக இடம்பெற்றது. இந்த நிலையில், 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்றது. இதில், கடந்தாண்டு 8-வது இடத்தை பெற்ற தமிழ்நாடு அணி, இந்தாண்டு இரண்டாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.  அதன்படி, 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களை வென்று தமிழ்நாடு அணி தங்கத்தின் அடிப்படையில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. இதுபோன்று, 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 156 பதக்கங்களுடன் மகாராஷ்டிரா அணி முதலிடம் பிடித்தது. அதேபோல், 35 தங்கம், 22 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் ஹரியானா அணி மூன்றாவது இடம் பிடித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்