Khelo India Games [File Image]
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், நேற்று ஒரே நாளில் தமிழகத்துக்கு 6 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
நேற்றைய தினம் தமிழ்நாடு முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திழும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதே வேலையில் தமிழகம் 12 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஐந்தாம் நாளான இன்று ஆடவர் ஒற்றையருக்கான தடகள போட்டி (110 மீ தடை ஓட்டம், 400 மீ ஓட்டம்), கலப்பு இரட்டையருக்கான (யோகா) போட்டி, ஒற்றையர் மகளிருக்கான (ஸ்குவாஷ்) போட்டி, ஒற்றையர் மகளிருக்கான (சைக்கிளிங) போட்டி ஆகியவற்றில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.
இதில், சைக்கிளிங் போட்டியில் மட்டும் 2 கி.மீ. மற்றும் 7.5 கி.மீ. பிரிவுகளில் 2 தங்கம் கிடைத்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா 14 தங்க பதக்கத்தையும், 15 வெள்ளிப் பதக்கங்களையும், 16 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 45 பதக்கங்களை வென்றுள்ளது.
பல்வேறு தடைகளை தகர்த்து ஜல்லிக்கட்டை மீட்டது திமுக.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!
அடுத்தபடியாக, தமிழ்நாடு 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. ஹரியானா மாநிலம் 7 தங்கப் பதக்கமும்,6 வெள்ளிப் பதக்கமும்,19 வெண்கல பதக்கம் என மொத்தம் 32 பதக்கத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று எலான் மஸ்கின் தீவிர…
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…