காசி பயணம் போட்டி பயணம் அல்ல – அமைச்சர் சேகர் பாபு
காசி பயணம் யாருக்கும் போட்டியாக மேற்கொள்ளப்படும் பயணம் அல்ல என சேகர் பாபு பேட்டி.
இந்து சமய அறநிலையத்துறை 200 நபர்களை ஆன்மீகப் பயணமாக காசி அழைத்து செல்ல முடிவு செய்திருந்தனர். அதன்படி, 200 பயணம் மேற்கொண்ட நிலையில், காசிக்கு ஆன்மிக பயணம் சென்று சென்னை திரும்பிய பயனாளிகளை சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைச்சர் சேகர்பாபு வரவேற்றார்.
அமைச்சர் சேகர் பாபு பேட்டி
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு, காசி ஆன்மீக பயண திட்டம் தொடரும்; ஏற்கனவே விண்ணப்பித்து தேர்வு செய்யப்படாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், காசி பயணம் என்பது ஒரு ஆன்மீக பயணம். இது யாருக்கும் போட்டியாக மேற்கொள்ளப்படும் பயணம் அல்ல என தெரிவித்துள்ளார்.