“பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய இளம் சாதனையாளர் கெவின்..!

“கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக்கட்டணத்தை ரத்து செய்யுங்கள் அங்கிள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு,இளம் சாதனையாளர் கெவின் ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.இந்தக் கடிதம் தபோது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கொரோனா தொற்றின் காரணமாக கல்விக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயதே ஆன இளம் உலக சாதனையாளர் கெவின் ராகுல் என்ற சிறுவன் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கெவின் ராகுல். இவர் ஒரு நிமிடத்தில் 150 கார்களுடைய லோகோக்களின் பெயர்களை சொல்லும் திறமையுடையவர்.இதனால்,ஆசிய சாதனை புத்தகத்திலும் உலக சாதனை கின்னஸ் புத்தகத்திலும் கெவின் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில்,முதல்வர் ஸ்டாலினுக்கு கெவின் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,”மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின் மாமாவுக்கு,என் பெயர் ஆர்.கெவின் ராகுல்,நான் 2 ஆம் வகுப்பு படிக்கிறேன்.நான் ஆசிய அளவிலான சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன்.அது போல் இந்திய சாதனை புத்தகத்திலும் எனது பெயர் இடம்பெற்றுள்ளது.
நான் சென்னை புரசைவாக்கத்தில் வசித்து வருகிறேன்.மே 2ஆம் தேதி என்னுடைய பிறந்தநாள்.எனினும்,அன்றைய தினம்தான் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பிறந்தாளாகும்.ஏனெனில்,என் பிறந்த நாள் அன்றுதான் தேர்தல் முடிவுகள் வெளியாகின.அதில்,நீங்கள் வெற்றி பெற்றதன் மூலம் அன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாக மாறியது.
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஸ்டாலின் மாமா.நீங்கள் மக்களுடைய தலைவர்,மக்களுடைய முதல்வர்.நீங்கள் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.மாமா,உங்களிடம் கூற வேண்டிய இரண்டு சிறிய கோரிக்கைகள் எனக்கு உள்ளன.அதாவது,
- தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும்.அது போல் கொரோனா தொற்று காலத்தில் பள்ளிக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.
- 7 வயதில் ஒரு நிமிடத்தில் 150 கார்களின் லோகோக்களை அடையாளம் கண்டு சொல்வதில் உலக சாதனை படைத்துள்ளேன்.அதனால், உங்களிடம் இருந்து விரைவில் பாராட்டுகளை பெற காத்திருக்கிறேன்.
கலைஞர் தாத்தா போல உழைப்பும்,சுறுசுறுப்பும்,ஓய்வறியா தன்மையுடன் உங்கள் நல்லாட்சி தொடர,உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன். உங்களின் வருங்கால திட்டங்கள், ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள்”,என்று கூறியுள்ளார்.இந்தக் கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025