கேரளாவில் கொலை..தமிழகத்தில் உடல்….மனைவி முகத்தை சிதைத்து உடலை வீசிய கணவன்..மறுபரிசோதனையில் உடல்..!
- கேரளாவில் கொலை செய்யப்பட்டு நெல்லை மாவட்டத்தில் வீசி எரியப்பட்ட உடல்
- கொலையை செய்த கொடூர கணவன் கேரள போலீசிடம் சிக்கினான் புதைக்கபட்ட உடல் மீண்டும் மறுபரிசோதனை
கேரளவில் கொலைச்செய்யபட்டு நெல்லை மாவட்டம் வள்ளியூரில் வீசப்பட்ட பெண்ணின் உடல் மீண்டும் கேரள போலீசார் முன்னிலையில் மறுபரிசோதனைச் செய்யப்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் முகம் சிதைந்த ஒரு பெண்ணின் சடலம் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் கிடந்தது.இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் இறந்த பெண்ணின் பெயர் வித்யா என்பதும் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்ற முதல் தகவல் கிடைத்தது ஆனால் அவருடைய உடலை யாரும் உரிமைக் கோரி வரததால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வள்ளியூர் போலீசாரால் புதைக்கப்பட்டது.
( இந்நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையில் இறங்கிய கேரள போலீசார் தமிழகத்திற்கு வித்யா தொடர்பாக வள்ளியூர் போலீசாரை அணுகல் )
வித்யாவை யார் கொன்றார் அதுவும் அவருடைய முகத்தை அடையாளம் தெரியாதபடி இப்படி கொடூரமாக சிதைத்தது யார் என்று விடைத்தெரியாமல் இருந்து வந்தது.
இந்நிலையில் கேரள போலீசாரிடம் பிரேம் குமார் வித்யாவை காணவில்லை என்ற புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த வழக்கு குறித்து விசாரணையில் இறங்கிய கேரள போலீசாருக்கு காத்திருந்தது ஷாக் , மனைவி காணவில்லை என்ற வழக்கு பின்னர் கொலை வழக்காக மாறியது. கேரள போலீசாரின் இந்த வழக்கு தொடர்பான தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன.
திடுக்கிட வைக்கும் கணவரின் வாக்குமூலம் :
காணவில்லை என்ற வழக்கு தொடர்பாக கேரள போலீசார் வித்யாவின் கணவர் பிரேம் குமாரிடம் விசாரணை நடத்தினார்.அதில் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார் அதில் வித்யாவை கொன்றது நான் தான் மேலும் அவருடைய வாக்குமுலத்தில் தனது பள்ளி பருவத் தோழியான சுனிதா பேபியுடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.இதற்கு இடையூராக இருந்த என் மனைவி வித்யாவை கொன்று விட தோழியுடன் திட்டம் தீட்டி அவரை கேரளாவில் கொன்று முகத்தை சிதைத்து உடலை வள்ளியூரில் வீசி சென்றேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் தமிழகம் விரைந்த கேரள காவல்துரையினர் ராதபுரம் தாசில்தார் செல்வன் முன்னிலையில் கேரள மருத்துவக்குழுவினர் உடலை தோண்டி எடுத்து மீண்டும் மறுபரிசோதனை செய்தனர்.
மேலும் வித்யாவின் கணவர் பிரேம் குமார் மற்றும் அவருடைய பள்ளிப் பருவத் தோழியான சுனிதா பேபி இருவரையும் கேரள போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.