இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் காலமானார்..! முதல்வர் இரங்கல்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்கள் காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கேரள மாநிலத் தலைவர் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனைக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய நாட்டின் மதநல்லிணக்கத்திற்கும், சிறுபான்மைச் சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கும் தொடர்ந்து பாடுபட்டு வந்த அவரது மறைவு பேரிழப்பாகும். னைவரிடத்திலும் மாறாத அன்பு செலுத்தும் செய்யது ஹைதர் அலி சிஹாப் அவர்களை இழந்து வாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.