திருச்சி மாவட்ட மத்திய சிறையில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மத்திய சிறையில் உள்ளஅகதிகள் முகாமில் இன்று கேரள என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்தவர்களிடம் இவர்கள் விசாரணை நடத்தி இருந்தனர்.
இதனை தொடர்ந்து இந்த சோதனை இன்று நடைபெறுகிறது. அகதிகள் முகாமில் இருந்தவர்களின் கைப்பேசிகளை கேரள என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்துள்ளனர். அதன்பேரில் 9 பேரை கைது செய்து கேரளா அழைத்துச்செல்ல இன்று திருச்சி விரைந்துள்ளனர்.
தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , கேரள என்ஐஏ அதிகாரிகளிடம் அதற்கான ஆவணங்களையே கேட்டுள்ளனர். அந்த ஆவணங்கள் ஆய்வு செய்த பின்னர் மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் இருந்து சம்பந்தப்பட்ட 9 பேர் கேரள என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்குப்பதிவு எதனை பற்றியது என்பது குறித்து எந்த தகவலும் இதவரை வெளியிடப்படவில்லை.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…