கேரளா முதல்வரை பாதுகாக்க வேண்டும் – மு.க ஸ்டாலின் பதிவு!

கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இழப்பீடு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது கேரள பகுதியில் உள்ள மூணாறு அடுத்த பகுதி அருகே உள்ள பெட்டிமடி எனும் தேயிலைத் தோட்டப் பகுதியில் நள்ளிரவு ஏற்பட்ட தொடர் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் 30 குடியிருப்புகள் மண்ணில் புதைந்தன. மொத்தம் 82 பேர் வசித்து வந்ததாக கூறப்பட்டாலும், தற்போது 17 பேரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. 12 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர், மீதி உள்ளவர்களை மீட்பு குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவத்தால் மனமுடைந்து இருக்கும் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களுக்கு, மருத்துவ வசதிகளை செய்து கொடுத்து இழப்பீடு வழங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், உயிரிழந்த குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார். கேரளாவிற்கு தமிழக அரசு உதவ வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்!
மீட்பு – மருத்துவ வசதிகளைச் செய்து, இழப்பீடு வழங்கி அவர்களை @CMOKerala பாதுகாக்க வேண்டும்!
தமிழக அரசும் உதவ வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 7, 2020