சிலந்தி ஆறு: மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறாமல் கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ள கூடாது என தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதாக எழுந்த புகாரின் பெயரில், தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணையை மேற்கொண்டது. இந்த விசாரணையில் சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவது குறித்து விசாரணை நடைபெற்றது.
தென்மண்டல பசுமை தீர்ப்பாய விசாரணையில் கேரளா அரசு சார்பில் கூறுகையில், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை எதுவும் நாங்கள் (கேரள அரசு) கட்டவில்லை. உள்ளூர் மக்களின் நீர் தேவையை தீர்க்க சிறிய நீர் தடுப்பு குளம் போன்று தான் கட்டினோம் என கூறினர். இதனை ஏற்றுக்கொள்ளாத பசுமை தீர்ப்பாயம், சிலந்தி ஆற்றின் குறுக்கே கட்டுமான பணிகள் மேற்கொள்ள கேரள அரசுக்கு தடை கூறியது.
மேலும், தடுப்பணை, சிறிய குளம் போன்ற அமைப்பு என நீர்நிலைகளுக்கு குறுக்கே எந்த கட்டுமான பணிகள் மேற்கொண்டாலும் மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் மற்றும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என கூறியுள்ளதாகவும், இந்த வழக்கு விசாரணை வரும் ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்.
சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால் அமராவதி ஆற்றுக்கு நீர் வரத்து பெருமளவு குறைந்துவிடும் என்றும், இதனால், திருப்பூர், கரூர், திண்டுக்கல் பகுதி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்படுவர் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…