தவிச்ச வாய்க்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் இந்தாங்க ..!இல்ல எங்களுக்கு வேண்டாம்..என்றது தமிழகம்.!பினராயி தகவல்
தமிழகத்தில் உள்ள ஆறு ,குளம் ,அணைகள் என அனைத்தும் அடித்த கொடூர வெயிலுக்கு வற்றி வறண்டு உள்ளதால் மக்கள் குடிப்பதற்கு கூட கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.காலி கூடங்களோடு தவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று சற்று நிம்மதி அளிக்கும் விதமாக வறண்ட நாவிற்கு சற்று ஈரப்பதம் கிடைத்தது போல் மிதமான மழை சென்னையை முத்தம் மிட்டது.சென்னைவாசிகள் நெடுநாட்களாக அடித்த வெயிலுக்கு மத்தியில் குளிர்ச்சி நிரைந்த மழை சற்று இதமான சூழலை தந்துள்ளது.
இந்நிலையில் சென்னையின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க முதல்வர் அலுவலகம் கோரிக்கை வைத்தது. இதனை கவனம் கொண்ட கேரள முதல்வர் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் ரயில்கள் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்திற்கு உதவ முன்வந்த கேரளாவின் உதவியை தமிழக அரசு தண்ணீர் தட்டுப்பாட்டை தங்களால் சமாளிக்க முடியும் எனக் கூறி நிராகரித்து விட்டது என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஆமாம் இங்க காவேரியும் ,பாலாறும் ஓடுகிறது ஆறு ,குளம் எங்கும் தண்ணீர் நிரம்பி உள்ளது வேண்டாம் என்பதற்கு என்று மக்கள் வேதனையுடன் எண்ணி நகையாடுகின்றனர்.