கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலி – தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

DGPShankarJiwal

கேரள குண்டு வெடிப்பை தொடர்ந்து தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள கமலசேரி பகுதியில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தளத்தில், பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து 3 முறை குண்டுகள் வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கேரளா மாநிலத்தில் நடந்த இந்த குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்ரபை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கேரள குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக கேரளா எல்லையோர மாவட்டங்களான கோவை, தேனி, நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட எல்லைகளில் சோதனைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் தமிழக போலீசாருடன் வனத்துறையும் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாடு தளங்களில் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடுகாணி, எருமாடு, கனநல்லா உள்ளிட்ட 11 சோதனைச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பிரார்த்தனை கூட்டத்தில் வெடித்தது ‘டிபன் பாக்ஸ் குண்டு’ – டிஜிபி பரபரப்பு தகவல்! நடந்தது என்ன?

தீவிர விசாரணை

கேரள குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த முதற்கட்ட விசாரணையில், இன்று காலை 9.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிறிஸ்தவ வழிபாட்டுத் தளத்தில் வெடித்தது “டிபன் பாக்ஸ் குண்டு” தான் என கேரள மாநில டிஜிபி பேட்டியளித்துள்ளார்.

கேரளா குண்டு வெடிப்பு: முதல்வர் பினராயி விஜயனுடன் தொடர்புகொண்ட அமித்ஷா – அதிரடி உத்தரவு!

தற்பொழுது, குண்டுவெடிப்பின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்பு படை மற்றும் கேரள தீவிரவாத தடுப்பு பிரிவு உள்ளிட்ட அமைப்புகளும் தீவிர விசாரணை நடத்தி வருவதாக  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்