கெபிராஜை வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு வெளிவந்த பின்னர் அடுத்தடுத்த பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்ததாக பல மாணவிகள் சமூகவலைதளத்தில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். இதற்கிடையில், பத்ம சேஷாத்ரி மில்லினியம் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராக பணியாற்றி வந்த கெபிராஜ் மீது பாலியல் குற்றச்சாட்டு வெளிவந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில், தான்கல்லூரி மாணவியாக இருக்கும் சென்னையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே கெபிராஜ் தனியார் பள்ளியில் ஜூடோ பயிற்சியை பயின்று வருவதாகவும் அப்போது போட்டி ஒன்றுக்கு காரில் செல்லும்போது தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கொடுத்து இருந்தார்.
இதைத்தொடர்ந்து, அண்ணாநகர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று கெபிராஜை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இன்று ஜூடோ பயிற்சியாளர் கெபிராஜை சைதாப்பேட்டை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து வருகின்ற ஜூன் 14ஆம் தேதி வரை கெபிராஜை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…