தமிழக கின்னஸ் உலக சாதனையாளர் அப்துல் ஹலீமிற்கு அமெரிக்காவின் Kentucky Colonel பட்டம்.!
அமெரிக்காவின் கெண்டகி மாகாண அரசின் உயர்ந்த kentucky colonel award -க்கு தமிழகத்தை சேர்ந்த கின்னஸ் உலக சாதனையாளரும் , தவில் மற்றும் கடம் கலைஞருமான Dr. அப்துல் ஹலீம் அவர்களின் பெயரை அமெரிக்க கெண்டகி மாகாண கவர்னர் தேர்வு செய்துள்ளார். இவரின் பெயரை kentucky colonel award -க்கு கடந்த மார்ச் மாதம் 04-ம் தேதி கெண்டகி மாகாண கவர்னர் தேரந்தெடுத்தார். ஆனால் தற்போது உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உள்ள கொரோனா வைரஸால் அந்த விருதை அனுப்புவதில்
தாமதம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த உயர்ந்த விருது இதற்கு முன்னர் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், ஜார்ஜ் H.W புஷ், புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
டாக்டர். அப்துல் ஹலீம் இதற்கு முன்னர் ஜார்ஜியா நாட்டு அரசாங்க விருதான KNIGHT விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது போன்ற உயர்ந்த விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
யார்..? இந்த டாக்டர். அப்துல் ஹலீம் , இவர் இதுவரை அப்படி என்ன சாதனைகளை படைத்துள்ளார் என்பதை பற்றி பார்க்கலாம். இவருடைய இயற்பெயர் ராஜராஜன். பின்னர் தனது பெயரை அப்துல் ஹலீம் என மாற்றிக்கொண்டார். இவரது தந்தை பெயர் நடராஜன், தாய் பெயர் ஹேமலதா. இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில் வசித்து வருகிறார்.
இவருடைய அம்மா கேரளா தலைநகர் திருவனந்தபுரத்தை சார்ந்தவர் , இவரது தந்தை கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் , இவரது தாய் பாடகி. அதனாலே இவருக்கு இசை மீதான ஆர்வம் தோன்றியது. இசை மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சிறு வயது முதல் எங்கு இசை கச்சேரி இருந்தாலும் அங்கு சென்று விடுவார். இசை மீது கொண்ட ஆர்வத்தினால் குமரி மாவட்டம் அய்யன்பாறவிளையை சார்ந்த கிருஷ்ணன் ஆசான் என்பவரிடம் முறைப்படி தபேலா கற்றுக்கொண்டார்.அதனால் அப்துல் ஹலீம் உடைய முதல் குரு கிருஷ்ணன் ஆசான் ஆவார்.
பின்னர் உலக பிரபல கடம் வித்வான் திரு. வி. சுரேஷ் அவர்களிடம் கடம் கற்றுக்கொண்டார். அகில இந்திய வானொலி நிலையத்தில் “A” கிரேட் கடம் வித்வானாக உள்ள அப்துல் ஹலீம் பல மேதைகளுடன் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.
தனது பள்ளி படிப்பை முடித்த பின், இசையில் ஆர்வம் மிகுந்த அப்துல் ஹலீம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் B.music (Bachelor of Arts in Music)சேர்ந்து படிக்கத் துவங்கினார்.பின்னர் கேரளா மாநிலம் கோட்டயத்தில் M.A (Master of Arts in Music) படித்தார்.பின்னர் மேலும் படிக்கவேண்டும் என கூறி தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சையில் M.Phil In Music படித்தார்.
World records university, UK இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இவருடைய சாதனைகள்:
1) உலகின் வேகமான கடம் வாசிப்பாளர்:
இந்த சாதனையை இவர் 2011 ஆம் ஆண்டு தக்கலையில் நிகழ்த்தியுள்ளார். ஒரு வினாடிக்கு 20 பீட்டு அதாவது ஒரு நிமிடத்திற்கு 1220 பீட்டுகளை வாசித்துள்ளார்.இந்த சாதனையை India Book Of Records , Asia Book Of Records and World Fastest Drummer America ஆகியோர் அங்கீகரித்தனர்.
2) உலகின் வேகமான டாம்பரின் வாசிப்பாளர்:
டாம்பரின் என்பது ஒரு கையால் தட்ட கூடிய இசைக் கருவி. இதில் நிமிடத்திற்கு 732 பீட்டுகளை வாசித்து இந்த சாதனை படைத்தார். 2011ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த சாதனையை India Book Of Records , Record Holders Republic ,UK ஆகியோர் அங்கீகரித்தனர்.
3)உலகின் வேகமான ஜெம்பே வாசிப்பாளர்:
ஜெம்பே இசைக்கருவி பெரும்பாலும் தென்னாப்பிரிக்க நாட்டில் பயன்படுத்தப்படுத்தக்கூடியது. இதில் ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் பீட்டுகள் வாசித்துள்ளார். இந்த சாதனையை 2011 ஆம் ஆண்டு நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை India Book Of Records , Record Holders Republic ,UK ஆகியோர் அங்கீகரித்தனர்.
4)உலகின் அதிக நேரம் தொடர்ந்து கடம் வாசிப்பு:
168 மணி நேரம் அதாவது தொடர்ந்து ஏழு நாள்கள் கடம் வாசித்து இந்த சாதனையை செய்துள்ளார். இந்த சாதனையில் இவருடன் 14 மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்த சாதனையை நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் வைத்து நிகழ்த்தினார். இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தது.
5)உலகிலேயே அதிக நேரம் தொடர்ந்து செண்டை வாசிப்பு:
கடந்த 2012-ம் ஆண்டு எட்டு மணி நேரம் முப்பது நிமிடம் தொடர்ந்து செண்டை வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.
6)உலகில் வேகமான கடம் வாசிப்பாளர்:
ஒரு மணி நேரத்தில் 57,600 பீட்டுகளை வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.
7)உலகில் மிகப்பெரிய கடம் :
உலகின் மிகப்பெரிய கடம் ஒன்றை உருவாக்கி உள்ளார். அந்த கடத்தின்உயரம் 11 மீட்டரும் , விட்டம் 2.52 ம் கொண்டது. இந்த கடத்தை வாசித்ததின் மூலம் உலகின் மிகப்பெரிய கடம் செய்ததற்கான சாதனையை படைத்தார் .இந்த சாதனை கின்னஸ் புத்தகத்திலும் ,லிம்கா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றது.
8)உலகில் அதிக நேரம் தொடர்ந்து உடுக்கு வாசித்தது:
5 மணி நேரம் 46 நிமிடங்கள் தொடர்ந்து உடுக்கு வாசித்துள்ளார். இந்த சாதனையை கடந்த 2012-ம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுடன் நிகழ்த்தினார்.இந்த சாதனையை India Book Of Records அங்கீகரித்தது.
9)உலகில் அதிக நேரம் தொடர்ந்து கடம் வாசிப்பு :
இது ஒரு மாரத்தான் வாசிப்பு ஆகும். தொடர்ந்து 12 மணி நேரம் இடைவிடாது கடம் வாசித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருடன் சேர்ந்து சில மாணவர்கள் கடம் வாசித்தனர். இதனை வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நிகழ்த்தினார்.இந்த சாதனையை Record Holders Republic அங்கீகரித்தது.
10)உலகின் நீண்ட மற்றும் பெரிய கடம் கச்சேரி:
இந்த சாதனையை இவர் உடன் நூறு மாணவர்கள் ஒரு நாள் முழுவதும் கடம் கச்சேரி நடத்தி இந்த சாதனையை நடத்தியுள்ளனர். இந்த சாதனை பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடந்து உள்ளது.இந்த சாதனையை Record Holders Republic ,UK அங்கீகரித்தனர்.
அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தின் உயர்ந்த kentucky colonel award வாங்க உள்ள தமிழகத்தை சேர்ந்த கடம் வாசிப்பாளர் அப்துல் ஹலீம் இதுபோன்று வருங்காலங்களில் பல சாதனைகளை படைக்க தினச்சுவடு சார்பாக வாழ்த்துக்கள்.